Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தள்ளிப் போனது கார்த்தியின் மெட்ராஸ்

மீண்டும் தள்ளிப் போனது கார்த்தியின் மெட்ராஸ்
, திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (12:02 IST)
சென்ற வருடம் கமல் படத்துடன் மோத தயாராக இருந்த கார்த்தியின் இந்த வருட மார்க்கெட் வேல்யூ அப்படியே தலைகீழ். சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா, பிரியாணி போன்ற படங்களின் தொடர் தோல்விகளால் சின்ன படங்களுடன் போட்டி போடவே அஞ்சுகிறது அவரது மெட்ராஸ்.
அட்டகத்தி இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் தயாராகி பல மாதங்கள் ஆகிறது. சென்ற மாதம் 15 ஆம் தேதி படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். வேறு படங்கள் அணி வகுத்ததால் வெளியிடவில்லை. 
 
ஆகஸ்ட் 29 படத்தை வெளியிடுவதாக தெரிவித்தனர். ஆனால் அன்றும் படம் வெளிவரப் போவதில்லை. இப்போது அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.
 
இந்த தேதியிலாவது படம் வெளிவருமா என்பது உடன் வெளியாகும் படங்களை பொறுத்தது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil