Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தமிழில் மாதவன்

மீண்டும் தமிழில் மாதவன்
, செவ்வாய், 6 மே 2014 (15:25 IST)
சாக்லெட் பாயாக தமிழில் அறிமுகமான மாதவன் இப்போது நாடறிந்த நடிகர். நல்ல வேடமாக இருந்தால் இந்தி இயக்குனர்கள் மாதவனை தேடுகிற அளவுக்கு நற்பெயரை சம்பாதித்துள்ளார்.
 
மாதவனுக்கு வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளதால் வருகிற வாய்ப்புகள் அனைத்திற்கும் நோ சொல்லிவிடுகிறார். மாதவனை அசத்துகிற வேடம் தமிழில் அமையுமா?
 
சமீபத்தில் இயக்குனர் சுதா கே.பிரசாத் மாதவனிடம் ஒரு கதை கூறியுள்ளார். கதையும், கேரக்டரும் மாதவனுக்கு பிடித்துள்ளது. விரைவில் சுதாவின் இயக்கத்தில் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
சுதா கே.பிரசாத் இதற்கு முன் துரோகி படத்தை இயக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil