Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், நவம்பரில் படப்பிடிப்பு...?

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், நவம்பரில் படப்பிடிப்பு...?
, வியாழன், 10 ஜூலை 2014 (15:45 IST)
கௌதம் வாசுதேவ மேனனின் படத்தில் நடித்து வரும் அஜீத் அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். நவம்பரில் இந்தப் புதிய படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
வீரம் படத்தை சிறுத்தை சிவா உருவாக்கிய விதம் அஜீத்தை ரொம்பவே கவர்ந்தது. அப்போதே மீண்டும் நாம் இணைந்து படம் செய்வோம், ஸ்கிரிப்டை தயார் செய்யுங்கள் என அஜீத் கூறியிருந்தார். அதன்படி அஜீத்துக்கேற்ற கதையை தேர்வு செய்து ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார் சிவா.
 
கௌதமின் படம் முடிந்ததும் சிவாவின் இயக்கத்தில் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறவர் முதற்கொண்டு மற்ற விவரங்கள் எதுவும் முடிவாகவில்லை. இந்த புதிய படம் முடிந்த பிறகு சிவா வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். அஜீத் நடித்த வேடத்தில் அனேகமாக சல்மான் கான் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil