Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கர்ஜிக்கும் சிங்கம் கூட்டணி

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (11:44 IST)
ஹரி - சூர்யா இணைந்து இதுவரை நான்கு படங்கள் செய்திருக்கிறார்கள். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2. நான்குமே வெற்றிப் படங்கள். சூர்யாவை நகரங்கள் தாண்டி கிராமங்களுக்கு கொண்டு சேர்த்ததில் இந்த நான்கு படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா, விரைவில் மீண்டும் ஹரியுடன் இணைய உள்ளார்.
 
அஞ்சான் படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அந்தப் படத்தை தனது டி2 என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்க சூர்யாவுக்கு விருப்பம். ஆனால் வெங்கட்பிரபு ஸ்டுடியோ கிரீனிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருந்ததால் ஸ்டுடியோ கிரீன் பேனரிலேயே அப்படம் தயாராகிறது.
 
வெங்கட்பிரபு படம் முடிந்ததும் சூர்யா - ஹரி கூட்டணி இணைகிறது. ஐந்தாவதுமுறை இவர்கள் இணையப் போகும் படத்தை சூர்யாவே தனது டி2 என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார்.
 
தற்போது விஷாலை வைத்து பூஜை படத்தை ஹரி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments