Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒன்றிணையும் என்னமோ நடக்குது டீம், விஜய் சேதுபதிக்கும் அழைப்பு

மீண்டும் ஒன்றிணையும் என்னமோ நடக்குது டீம், விஜய் சேதுபதிக்கும் அழைப்பு
, செவ்வாய், 24 ஜூன் 2014 (16:34 IST)
விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது ஓரளவு பெயரையும், வசூலையும் சம்பாதித்தது. படம் வெளியான போதே அப்படத்தின் இயக்குனர் ராஜபாண்டியன் மீண்டும் ஒரு படத்தை விஜய் வசந்தை வைத்து இயக்குவதாக அறிவித்தார். அந்தப் படம் ஆகஸ்டில் தொடங்குகிறது.
 
இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை ராஜபாண்டியன் இயக்க விஜய் வசந்த ஹீரோவாக நடிக்கிறார். இசை பிரேம்ஜி அமரன். படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். அந்த வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 
விஜய் சேதுபதி இடம் பொருள் ஏவல், வன்மம், புறம்போக்கு என்று எல்லா படங்களிலும் வேறெnரு ஹீரோவுடன்தான் நடித்து வருகிறார். விஜய் வசந்துடனும் நடிக்க விஜய் சேதுபதிக்கு ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்திலேயே அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.
 
விஜய் வசந்த் ஜோ‌டியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவிடம் கேட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil