Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டுமொரு த்ரில்லர் ரீமேக்கில் நடிக்கும் சித்தார்த்

மீண்டுமொரு த்ரில்லர் ரீமேக்கில் நடிக்கும் சித்தார்த்
, செவ்வாய், 8 ஜூலை 2014 (16:30 IST)
ஆந்திரா மீடியாவுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பின் தமிழில் அதிக கவனம் செலுத்துகிறார் நடிகர் சித்தார்த். நூற்றியெண்பது, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, உதயம் என தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காவியதலைவன், கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடித்துள்ள ஜிகிர்தண்டா இரண்டும் விரைவில் வெளியாகப் போகிறது.
தற்போது சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்து வரும் கன்னடப் படம் லூசியாவின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடித்து வருகிறார். இதுவொரு சைக்கலாஜிகல் த்ரில்லர். பவன் குமார் மக்களிடம் பணம் திரட்டி இந்தப் படத்தை எடுத்தார். சர்வதேச அளவில் பல விருதுகளை படம் வென்றது.
 
இந்நிலையில் மீண்டுமொரு சைக்கலாஜிகல் த்ரில்லரில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது மலையாள படத்தின் ரீமேக்.
 
சென்ற வருடம் சுனில் இப்ராஹிம் இயக்கத்தில் அருகில் ஓராள் திரைப்படம் வெளியானது. இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்த இதில் ரம்யா நம்பீஸன் டான்சராக நடித்திருந்தார். கார்ப்பரேஷன் தலைவியாக லேனாவும், மனநல மருத்துவராக பிரதாப் போத்தனும் வேடம் ஏற்றிருந்தனர். வெயிட்டராக முக்கிய வேடம் நிவின் பாலிக்கு.
 
மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த த்ரில்லரை சுனில் இப்ராஹிமே தமிழில் ரீமேக் செய்கிறார். இந்திரஜித் நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார். பிரதாப் போத்தன் நடித்த கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், லேனா கதாபாத்திரத்தில் மோனா, ரம்யா நம்பீஸனின் நடனக் கலைஞர் வேடத்தில் சானிகா நம்பியார் நடிக்க உள்ளனர்.
 
லூசியாவைப் போலவே இதுவுமொரு சைக்கலாஜிகல் த்ரில்லர். லூசியா சென்ற வருடம் செப்டம்பரில் வெளியானது என்றால் அருகில் ஓராள் ஆகஸ்டில்.
 
கதையிலும் ஒற்றுமை இருக்குமா?

Share this Story:

Follow Webdunia tamil