Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஷ்கின், கௌதம் படங்களில் நடிக்கப் போறேன்

மிஷ்கின், கௌதம் படங்களில் நடிக்கப் போறேன்
, திங்கள், 19 மே 2014 (13:34 IST)
தேர்தல் முடிந்துவிட்டது. மீண்டும் சினிமா தொழிலில் பிஸியாகிவிட்டார் சரத்குமார். சண்டமாருதம் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விரைவில் மேலும் சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார். அவர்களில் முக்கியமான இருவர் மிஷ்கின், கௌதம்.
 
மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிப்பவர்களின் முழு விவரம் தெரியவில்லை. இந்நிலையில் பத்திரிகைகளுக்கு பேட்டி தந்த சரத்குமார் மிஷ்கின் படத்தில் ஹீரோவாக நடிப்பதாக கூறினார். அந்தப் படம் பிசாசாக இருக்காது, அதற்கு அடுத்து மிஷ்கின் இயக்கும் படமாக இருக்கலாம் என்கிறார்கள்.
 
அதேபோல் கௌதம் இயக்கும் படத்திலும் நடிக்கயிருப்பதாக சரத்குமார் கூறினார். தற்போது அஜீத் நடிக்கும் படத்தை கௌதம் இயக்கி வருகிறார். அதில் சரத்குமார் நடிப்பதாக தெரியவில்லை. அஜீத் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கும் படத்தில் சரத்குமார் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கௌதம் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil