Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிட்டாய் கடை தமன்னாவும், சுட்டுக் கொல்லும் மகேஷ் பாபுவும்

மிட்டாய் கடை தமன்னாவும், சுட்டுக் கொல்லும் மகேஷ் பாபுவும்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:52 IST)
மகேஷ் பாபு ஜோ‌டியாக தமன்னா முதல்முறை நடித்திருக்கும் படம், ஆகடு. ஸ்ரீனி வைட்லா இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார்.
ஆகடுவில் தமன்னா மிட்டாய் கடை வைத்திருக்கும் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகேஷ் பாபு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.
 
சமீபமாக மகேஷ் பாபுவின் படங்கள் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்கின்றன. அதனால் யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
webdunia
தமிழில் தமன்னா சிவ கார்த்திகேயன் ஜோ‌டியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தவிர வேறு படங்களில்லை. ஆகடுவின் வெற்றிதான் தமன்னாவை தெலுங்கில் பிஸியாக்க வேண்டும். அதனை மனதில் வைத்து கடுமையான டயட்டில் பாடியை ஷேப்பாக்கி, டூயட் பாடலில் கவர்ச்சியில் புயலடித்துள்ளார்.
 
ஆகடுவில் ஸ்ருதி மகேஷ் பாபுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil