Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றானுக்காக தள்ளிப் போகும் விஸ்வரூபம்?

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2012 (11:31 IST)
தீபாவ‌ளிக்கு முன்பாகவே படங்களை வெளியிட தயா‌ரிப்பாளர்கள் சுறுசுறுப்பாகி வருகிறார்கள். இரண்டு பெ‌ரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால்கூட இரண்டு படங்களின் கலெக் ஷனில் கணிசமான அளவு சேதாரம் உண்டாகும் என்பது எல்லோருக்குமே தெ‌ரிந்திருக்கிறது.

கமலின் விஸ்வரூபம் அக்டோபர் 12 வெளியாகும் என அதிகாரபூர்வமில்லாத தகவல் ஒன்று பல வாரங்களாக உலவி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 12 மாற்றான் ‌ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேநாள் விஸ்வரூபமும் வெளியானால் இரண்டுப் படங்களுக்குமே சிக்கல். இரண்டுப் படங்களுக்கும் நல்ல திரையரங்குகள் கிடைப்பதில் போட்டி ஏற்படும் என்பது நிச்சயம். இதனால் விஸ்வரூபத்தின் வெளியீடு மேலும் சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள்.

அதேபோல் அக்டோபர் 12 அலெக்ஸ் பாண்டியன் வெளியாவதாக கூறப்பட்டது. மாற்றன் வெளியாவதால் அலெக்ஸ் பாண்டின் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தத் தகவலை ட்டுவிட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments