Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மான் கராத்தேயின் யுஎஸ், ஆஸ்ட்ரேலியா, மலேசியா வசூல்

மான் கராத்தேயின் யுஎஸ், ஆஸ்ட்ரேலியா, மலேசியா வசூல்
, செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:28 IST)
மான் கராத்தே தமிழகத்தைப் போலவே வெளிநாடுகளிலும் சுமார் படம் என்ற விமர்சனத்துடன் கணிசமான டாலர்களை கலெக்ஷன் செய்து வருகிறது.
யுஎஸ்ஸில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 24 திரையிடல்களில் 66,337 அமெரிக்க டாலர்களை தனதாக்கியுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 39.87 லட்சங்கள். சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் அதே மூன்று தினங்களில் ஐந்து திரையிடல்களில் 2,198 அமெரிக்க டாலர்களை தனதாக்கியுள்ளது. ரூபாயில் 1.32 லட்சம்.
 
ஆஸ்ட்ரேலியாவில் மான் கராத்தே மூன்று தினங்களில் 4 திரையிடல்களில் 29,162 ஆஸ்ட்ரேலிய டாலர்களை கலெக்ஷன் செய்துள்ளது. ரூபாயில் 16.25 லட்சங்கள்.
 
மலேசியாவில் மான் கராத்தே முதல் மூன்று தினங்களில் 17 திரையிடல்களில் 61.42 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிவ கார்ததிகேயன் மாஸ் ஹீரோவாக மாற்றமடைந்துள்ளார் என்பது உறுதியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil