Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மானே தேனே பேயே... இதுவும் சினிமாதான்

மானே தேனே பேயே... இதுவும் சினிமாதான்
, செவ்வாய், 8 ஜூலை 2014 (14:56 IST)
நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ படத்தின் பெயரிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தால் மட்டுமே திரையரங்கில் கூட்டத்தைப் பார்க்க முடியும். சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா தனது அடுத்தப் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், மானே தேனே பேயே.
 
நெடுஞ்சாலையில் நடித்த ஆரி இந்தப் புதிய படத்திலும் நாயகனாக நடிக்கிறார். நெடுஞ்சாலைக்கு முற்றிலும் வித்தியாசமாக ரொமான்டிக் காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. அதனால்தான் ரொமான்டிசமும், நகைச்சுவையும் வெளிப்படும் மானே தேனே பேயே என்ற பெயரை தேர்வு செய்துள்ளார்.
 
கிருஷ்ணாவின் முதல் படம் சில்லுன்னு ஒரு காதலும் காதல் படம்தான். ஆனால் அதன் சாயல் எதுவுமில்லாமல் இந்தப் படம் தயாராகிறது. படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil