Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன்

மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன்
, சனி, 28 ஜூன் 2014 (19:01 IST)
நிர்மல் குமார் இயக்கத்தில் சலீம் படத்தில் நடித்து வருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இசையை குறைத்து இனி முழுக்க நடிப்பில் திறமை காட்டப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
நான் படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் பெயர் சலீம். தனது இரண்டாவது படத்துக்கு அதையே பெயராக்கியிருக்கிறார். ஏறக்குறைய படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் புதிய தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி.
 
பிரேம்ஜி அமரன் சலீமில் நடிக்கிறார் என்பதுதான் அந்தத் தகவல். பிரேம்ஜி அமரன் என்று வெறுமனே குறிப்பிடாமல் மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
கலாய்க்கிற ரோல் கிடைத்தால் விஜய் ஆண்டனி பின்னி பெடலெடுப்பார் போலிருக்கே.

Share this Story:

Follow Webdunia tamil