Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் லிங்கம்

மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் லிங்கம்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (18:08 IST)
ஆண்டுக்கு ஒரு படம் ‌‌‌‌ரிலீஸ் செய்தாலும், அரை டஜன் புதுப்பட அறிவிப்புகளை வெளியிடுகிறவர் சஞ்சய்ராம். பூவா தலையா, சுர்லா படங்கள் வெளிவரயிருக்கும் நிலையில் அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஏற்கனவே சஞ்சய்ராம் அறிவித்திருந்தார். அறுவடை படம் வெளியாகாத நிலையில் மற்றொரு தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பாத மம்முட்டி சஞ்சய்ராமின் அறிவிப்புக்கு எந்த ‌‌‌‌ரியா‌க்சனும் காட்டவில்லை.

இந்நிலையில் மீண்டும் மம்முட்டி, சரத் இணையும் படம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார் சஞ்சய்ராம். படத்துக்கு லிங்கம் என்று பெயர் வைத்துள்ளார். இது அவரது தயா‌‌‌‌ரிப்பு நிறுவனத்தின் பெயர்.

மம்முட்டி, சரத்குமார் இணைந்து நடித்த பழஸிராஜவிரைவில் மலையாளம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil