Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்னிப்பு கேட்ட தனுஷ்

மன்னிப்பு கேட்ட தனுஷ்
, வெள்ளி, 12 நவம்பர் 2010 (20:00 IST)
இது மன்னிப்பு வாரம் போலிருக்கிறது. உதவி இயக்குனர்கள் குறித்து சில கருத்துகளை பேசிவிட்டு அதற்காக மன்னிப்பு கேட்டார் மிஷ்கின். அவர் கடிதம் மூலம் கேட்டதை தனுஷ் ஊடகம் மூலமாக கேட்டுக் கொண்டார்.

தீபாவளிக்கு வந்த உத்தமபுத்திரன் படத்தில் விவேக் நடித்திருந்தார். வழக்கம்போல அவரது நாய்ஸ் பொல்யூஷன் காமெடியில் கொஞ்சம் காரத்தையும் சேர்த்து‌க் கிண்டியது பிரச்சனையாகிவிட்டது. முக்கியமாக கவுண்டர்களைப் பற்றி விவேக் அடித்த கமெண்ட் அவர்களுக்கு அலர்‌ஜியாகிவிட்டது.

அப்புறமென்ன.. ஆர்ப்பாட்டம் கிளர்ச்சி என அதகளம் பண்ணியதில் கோயம்புத்தூர் பக்கம் உத்தமபுத்திரனை திரையரங்கைவிட்டு ூக்கினர். பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த தனுஷ், யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அந்த வசனத்தை வைக்கவில்லை என தமிழ் சினிமாவின் தொன்மை வாய்ந்த சமரச பேச்சை முன் வைக்க, பிரச்சனை ஓரளவு தணிந்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil