Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் மயிலு?

Webdunia
புதன், 12 டிசம்பர் 2012 (13:27 IST)
FILE
பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதல் நடந்த போதும் தேனி பக்கம் தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை உள்ளூர் ஆட்களை வைத்து நடத்தினார் பாரதிராஜா. பிரச்சனைகள் பக்கம் தலைவைக்காமல் தனது கலை படைப்பை கண்ணும் கருத்துமாக உருவாக்கியிருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டுவிழா.

படத்தின் தொடக்க விழாவுக்கு மணிரத்னம் போன்ற பெரிய தலைகளை அழைத்து பிரமாதப்படுத்தியதுபோல் இசை வெளியீட்டு விழாவையும் மதுரையை கலங்கடிக்கும் விதத்தில் நடத்த இமயம் தீர்மானித்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த விழாவுக்கு ஸ்ரீதேவியை சீஃப் கெஸ்ட்களில் ஒருவராக அழைக்கும் முடிவிலிருக்கிறாராம் பாரதிராஜா.

சமீபத்தில் நடந்த கமலின் விஸ்வரூபம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாரதிராஜா கலந்து கொண்டது போல் அன்னக்கொடி ஆடியோ விழாவில் கமல் கலந்து கொள்கிறார். அப்படியே ரஜினியை அழைக்கவும் முடிவு செய்திருப்பதாக கேள்வி.

முதல்முறையாக இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு பாரதிராஜா வாய்ப்பு தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments