Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகனை இயக்கும் தந்தை

மகனை இயக்கும் தந்தை
, வியாழன், 8 மே 2014 (16:56 IST)
பசங்க படத்தில் வில்லத்தனம் செய்யும் சிறுவனாக நடித்தவர் ஸ்ரீராம். அந்தப் படத்தில் சிறந்த முறையில் நடித்தமைக்காக தேசிய விருதும் பெற்றார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான கோலிசோடா படமும் வெற்றிப் படமாக அமைய, தற்போது ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்திருக்கிறார். 
இவர் தற்போது தரை டிக்கெட் என்ற தலைப்பிலான படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைதான் இவரின் தந்தை சிவராம கிருஷ்ணன் இயக்குகிறார். பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த இவர், தனது மகனை ஹீரோவாக வைத்தே இயக்குனராக அறிமுகமாகிறார். 
 
மேலும், கிராமத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு ஓடிவரும் ஒரு இளைஞன், சினிமாவில் தங்கத்தாமரை விருது வாங்கும் அளவுக்கு எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் தரை டிக்கெட்-டின் கதை என்கிறார் சிவராம கிருஷ்ணன்.

Share this Story:

Follow Webdunia tamil