Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர்களத்தில் ஒரு பூ ஆடியோ வெ‌ளி‌யீடு

போர்களத்தில் ஒரு பூ ஆடியோ வெ‌ளி‌யீடு
, செவ்வாய், 20 மே 2014 (15:01 IST)
இலங்கை சிங்கள ராணுவ‌த்‌தினரா‌ல் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்தான் இளம்பெண் இசைப்பிரியா. விடுதலைப் புலிகள் நடத்தி வந்த டிவி சேனலில் தமிழகளின் துயரங்களையும், போராட்டத்திற்கான வலிமையையும் தனது உணர்ச்சி மிகுந்த பாடல்களால் பாடியதன் மூலம் அறியப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறுதான் போர்களத்தில் ஒரு பூ. 
இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய படத்தின் இயக்குனர் கணேசன், இந்த படத்திற்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்து உயிர் கொடுத்தது இசைஞானியின் இசைதான். படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டதே பெரும் பாக்கியமாக கருத்துகிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன். 
 
இதில் இசைப்பிரியாவாக பிரியாவும், நாயகனாக பாலாஜியும் நடித்திருக் கிறார்கள். விழாவில்..இளையராஜா, இயக்குனர் பேரரசு. நடிகர்கள் நந்தா, விவேக், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil