Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும் அனிருத்தின் சான்ஸே இல்ல

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (12:02 IST)
அனிருத்தின் பெயரை திரையில் பார்த்தால் தியேட்டர் அதகளமாகிறது. வேலையில்லா பட்டதாரியில் தனுஷுக்கு கிடைக்கும் அதே கிளாப்ஸ், விசில் அனிருத்துக்கும் கிடைக்கிறது. நாலே படத்தில் இப்படியொரு ஆதரவை பெறுவது... சான்ஸே இல்ல.
அனிருத் சான்ஸே இல்ல என்ற பெயரில் ஒரு வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். சிட்டியில் அது குறித்துதான் சூடாகப் பேசிக் கொள்கிறார்கள். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். 
 
கொலவெறி மாதிரி இந்த சான்ஸே இல்லையும் தேசிய பிரபலத்தை பெறும் என்கிறார்கள் அனிருத்தின் ரசிகர்கள். ஆகஸ்ட் ஒன்று பாடல் வெளியிடப்படுகிறது.
 
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பொது மக்கள் முன்னிலையில் இந்தப் பாடலை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனிருத்தின் திரையுலக நண்பர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். ஆகஸ்ட் 1 ராயப்பேட்டை பக்கம் போகிறவர்கள் அந்த ரூட்டை தவிர்ப்பது நல்லது.
 
வேறென்ன... அன்றைய தினம் எக்ஸ்பிரஸ் அவென்யூ இருக்கிற ராயப்பேட்டை மணிக்கூண்டு ட்ராபிக் ஜாமில் திணறப் போகிறது.
 
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments