Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெயரை மாற்று - பிரபுதேவா படத்துக்கு ஹாலிவுட் மிரட்டல்

பெயரை மாற்று - பிரபுதேவா படத்துக்கு ஹாலிவுட் மிரட்டல்
, வியாழன், 6 பிப்ரவரி 2014 (15:04 IST)
48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.
FILE

பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

webdunia
FILE
இந்தப் பெயர் - ஆக்ஷன் ஜாக்சன் - நாங்கள் 1988 ல் எடுத்த ஹாலிவுட் படத்தின் பெயர். அதனை நாங்கள்தான் பதிவு செய்திருக்கிறோம். அதனை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம். 48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் நடவடிக்கைதான் என ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

பிரபுதேவாவின் முந்தைய படமான ராம்போ ராஜ்குமாருக்கும் இதேபோல் எச்சரிக்கை விடப்பட்டது. ராம்போ நாங்கள் எடுத்தப் படம், அந்தப் பெயரை நீங்கள் எப்படி வைக்கலாம் என கேள்வி எழுப்பியதால் ராம்போ ராஜ்குமாரை ரா...ராஜ்குமார் என்று மாற்றினர். ஆனால் இந்தமுறை அப்படி பணிந்து போகும் எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை.

வார்னர் பிரதர்ஸின் படம் ஆங்கிலம். எங்களுடையது ஹிந்தி. இந்தியாவில் இதனை முறைப்படி பதிவு செய்து நோ அப்ஜெக்ஷன் சான்றிதழும் வாங்கியுள்ளோம். படத்தின் பெயரை மாற்றுவதாக இல்லை, பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil