Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூலோகம் படத்துக்கு யு சான்றிதழ்

பூலோகம் படத்துக்கு யு சான்றிதழ்
, திங்கள், 5 மே 2014 (13:58 IST)
ஜெயம் ரவி பாக்ஸராக நடித்திருக்கும் பூலோகம் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
 
அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பூலோகத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, த்ரிஷா நடித்துள்ளனர். இதில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ரவி நடித்துள்ளார். இதற்காக சிக்ஸ்பேக் வைத்து தனது உடம்பை பாக்ஸரைப் போல் கட்டுக்கோப்பாக அவர் மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், படத்தில் மயான கொள்ளை சடங்கு பிரதானமாக வருகிறது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கினர். 
 
இதனால் பூலோகம் வரிச்சலுகைக்கு தகுதி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil