Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூச்சாண்டி காட்டப் போகும் சூர்யா, வெங்கட்பிரபு...?

பூச்சாண்டி காட்டப் போகும் சூர்யா, வெங்கட்பிரபு...?
, திங்கள், 9 ஜூன் 2014 (19:49 IST)
அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.
இந்தப் படத்துக்கு பூச்சாண்டி என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரியாணி என்று பெயர் வைத்த வெங்கி பூச்சாண்டி என்று வைக்காமலிருந்தால்தான் ஆச்சரியம்.
 
இந்தப் படம் காமெடி ஹாரர் வகைமையைச் சேர்ந்ததாம் (அதனால்தான் இப்படியொரு பெயர்). காஞ்சனா, பீட்சா படங்களின் வெற்றியால் ஹாரர் படங்களுக்கு தனி மரியாதை கிடைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். சமீபத்தில் வெளியான யாமிருக்க பயமேயும் வெற்றி. 
 
காமெடியைவிட்டு பிரேம் பிசகாத சுந்தர் சி-யும் காமெடி ஹாரர் படம்தான் - அரண்மனை - தற்போது இயக்கி வருகிறார். மிஷ்கினின் பிசாசு, லாரன்ஸின் முனி 3 கங்கா என்று தமிழ் சினிமாவெங்கும் பேய் ராஜ்ஜியம்.
 
தனது பங்குக்கு வெங்கியும் பூச்சாண்டி காட்டப் போகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil