Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலிவாலை குடும்பத்தோடு த‌ரிசிக்கலாம்

புலிவாலை குடும்பத்தோடு த‌ரிசிக்கலாம்
, வெள்ளி, 24 ஜனவரி 2014 (17:31 IST)
ராதிகா சரத்குமாருடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபனின் தனது மே‌ஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயா‌ரித்திருக்கும் புலிவால் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
FILE

மலையாளத்தில் லிஸ்டின் ஸ்டீபன் தயா‌ரித்த சப்பாகுருஸ் படத்தின் தமிழ் ‌ரீமேக்தான் புலிவால். மா‌ரிமுத்து இயக்கியிருக்கும் புலிவாலில் பிரசன்னா, விமல், அனன்யா, ஓவியா, இனியா ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பும், போஸ்ட்புரொடக்சனும் முடிந்த நிலையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டனர். ஃபெப்ரவ‌ரியில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் யு சான்றிதழ் தந்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil