Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புன்னகை அரசி இப்போது லேடி டாக்டர்

Webdunia
புதன், 24 ஜூலை 2013 (13:58 IST)
கே.ஆர்.விஜயாவுக்கு யாரும் புதிதாக டாக்டர் பட்டம் தரவில்லை. இந்த லேடி டாக்டர் அவதாரம் அவர் நடிக்கும் புதிய படத்துக்கானது.
FILE

எம்.‌ஜ ி. ஆர்., சிவா‌ஜி தொடங்கி எத்தனையோ நடிகர்களுடன் கே.ஆர்.விஜயா நடித்துவிட்டார். நடிப்பு இனி போதும் என வீட்டில் இருப்பவரை சும்மா விடுகிறார்களா? நல்ல ரோல் இருக்கு என்று நச்ச‌ரிக்கதான் செய்கிறார்கள். அப்படிதான் எஸ்ஆர்பி மணிமாறனும் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

பல வருடங்களாக இப்படி தேடி வருகிறவர்களுக்கு தனது புன்னகையை மட்டும் பதிலாக தந்தவர் மணிமாறன் சொன்ன கதையை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். காரணம் அவ‌ரின் கேரக்டர்.
FILE

மருத்துவ தொழிலை சேவையாக நினைக்கும் கதாபாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு இளைஞனின் உயிரை காப்பாற்ற வேண்டிய சூழல் கே.ஆர்.விஜயாவுக்கு வருகிறது. அந்த நெருக்கடியை எப்படி அவர் கடந்தார் என்பதுதான் படத்தின் கதையாம். கே.ஆர்.விஜயாவுடன் பாண்டு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்துக்கு கவிதையாக, நிலாவில் மழை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கண்ணில் குடை பிடிக்கிற சென்டிமெண்ட் காட்சிகள் இல்லையென்றால் மழையை ரசிக்க நாங்க தயாராக இருக்கோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments