Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப்பொலிவுடன் தயாராகும் காமராஜ் - சமுத்திரகனியும் நடிக்கிறார்

புதுப்பொலிவுடன் தயாராகும் காமராஜ் - சமுத்திரகனியும் நடிக்கிறார்
, திங்கள், 23 ஜூன் 2014 (15:14 IST)
2004-ல் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றுவதுடன் சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து புதுப்பொலிவுடன் உருவாக்கி வருகின்றனர்.
காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவர்களின் கோர்வையாக காமராஜ் திரைப்படத்தை பாலகிருஷ்ணன் எடுத்தார். படம் வழக்கம் போல தமிழ் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. காமராஜர் குறித்த படத்தைப் பார்க்க காங்கிரஸ்காரர்களே ஆர்வம் காட்டவில்லை. பலருக்கு இப்படியொரு படம் வெளியானதே தெரியாது.
 
காமராஜரின் வாழ்க்கை ஒன்றும் சீஸனல் வியாபாரம் கிடையாதே. 2004-ல் வெளியான படத்தை மீண்டும் மெருகேற்றி வெளியிடும் முயற்சியில் பாலகிருஷ்ணன் இறங்கியிருக்கிறார். காமராஜர் குறித்த கூடுதலான சம்பவங்களை படத்தில் இணைக்கும் திட்டமும் உள்ளது. முக்கியமாக இயக்குனர் சமுத்திரகனி தியாகியின் பேரனாக நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்கி படத்தில் சேர்க்க உள்ளனர்.
 
புதுப்பொலிவுடன் தயாராகி வரும் காமராஜ் படத்தை இந்தமுறையாவது தமிழ் சமூகம் கண்டு கொள்ளுமா?

Share this Story:

Follow Webdunia tamil