Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரமாண்டமாக வெளியாகும் வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை

பிரமாண்டமாக வெளியாகும் வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை
, புதன், 16 ஜூலை 2014 (19:44 IST)
வரும் 18ஆம் தேதி தனுஷின் வேலையில்லா பட்டதாரி, நட்ராஜின் சதுரங்க வேட்டை படங்கள் வெளியாகின்றன. வேலையில்லா பட்டதாரிக்கு உள்ள நட்சத்திர அந்தஸ்து சதுரங்க வேட்டைக்கு இல்லை. ஆனால் எப்போது சதுரங்க வேட்டையின் தமிழக திரையரங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியதோ அப்போதே நிலைமை மாறியது. சதுரங்க வேட்டைக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
வேலையில்லா பட்டதாரி பலவிதங்களில் தனுஷுக்கு முக்கியமான படம். கடைசியாக வெளியான மரியான், நய்யாண்டி இரண்டும் தோல்வியடைந்ததால் வேலையில்லா பட்டதாரி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும், இது தனுஷின் 25 ஆவது படமும்கூட. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை வாங்கியுள்ளது.

நட்ராஜ் நடித்திருக்கும் சதுரங்க வேட்டையை மனோபாலா தயாரித்தார். பத்தோடு பதினொன்றாக இருந்த படம், அதன் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்தது. ட்ரெய்லரைப் பார்த்து இம்ப்ரஸான ரஜினி மனோபாலாவை ஃபோனில் அழைத்து பாராட்டினார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் விநியோக உரிமையை வாங்கியதோடு படம் முதல் வரிசைக்கு வந்தது. 
webdunia
மொத்தம் 250 திரையரங்குகளில் சதுரங்க வேட்டையை திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. வேலையில்லா பட்டதாரி 425 திரையரங்குகளில் வெளியாவதாக கூறினாலும் எண்ணிக்கை 350-க்குள்தான் இருக்கும் என்கிறார்கள். 
 
சமீபத்தில் இரு படங்கள் இவ்வளவு அதிக திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாகவில்லை. 
 
வெற்றிக்கோட்டை யார் தொடப் போகிறார்கள்? வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil