Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவ‌ரி படங்கள்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (17:23 IST)
பிப்ரவ‌ரியில் நான்கு மிகப் பெ‌ரிய படங்கள் மோதுகின்றன. நான்குமே எதிர்பார்ப்புக்க ு‌ ரிய படங்கள்.

வரும் 5ஆ‌ம் தேதி அசல் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லரே ரசிகர்களை மிரட்டிவிட்டது. படத்துக்கான ‌ரிசர்வேஷன் அட்டகாசம் என்கிறார்கள் திரையரங்கு உ‌ ரிமையாளர்கள். படம் எப்படி இருந்தாலும் பத்து தினங்களுக்கு பட்டையை கிளப்பும் என்பது உறுதி.

பிப்ரவ‌ர ி 19 ஆம் தேதி விண்ணைத்தாண்டி வருவாயா வெளியாகிறது. ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். சிம்பு, த ்‌ ரிஷாவின் காதல் காட்சிகளும், கௌதமின் மேக்கிங்கும் ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.

லிங்குசாமியின் பையாவும் இந்த மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் திரைக்கதைதான் பலம். பாடல்களும் ஹிட்டாகியிருப்பது இன்னொரு பிளஸ். மிலிந்த் சோமனின் வில்லத்தனம் படத்துக்கு இன்னொரு கலரை கொடுக்கும் என நம்பலாம்.

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளைக்கு சன் பிக்சாஸின் விளம்பர பலமும் கூட்டு சேர்ந்திருக்கிறது. மூன்று ஹீரோயின்கள், ப்ளேபாய் சப்ஜெக்ட் என விஷாலுக்கு முற்றிலும் புதிய களம். ரசிகர்களுக்கும் அப்படியே இருந்தால் விஷாலுக்கு இன்னொரு வெற்றி.

இதை‌த்தவிர வேறு சில படங்களும் பிப்ரவ‌ரியில் திரைக்கு வருகின்றன. என்றாலும் இந்த நான்கு படங்கள்தான் பிரமாண்ட படங்கள். யாருக்கு வெற்றி என்பது ரசிகர்கள் கையில்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments