Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஜோ‌ய் நம்பியாரின் தயாரிப்பில் 3டி யில் வெளியாகும் பீட்சா

Webdunia
சனி, 12 ஜூலை 2014 (11:44 IST)
பீட்சா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கிய பிஜோ‌ய் நம்பியார் 3டி யில் இந்தி பீட்சா வை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.
 
பீட்சா படம் வெளியானதுமே அதன் ரீமேக் உரிமையை பிஜோ‌ய் நம்பியார் வாங்கினார். பீட்சா தெலுங்கில் டப் செய்யப்பட்டது. கன்னடம், பெங்கால் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த மாதம் 18-ம் தேதி இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பீட்சா என்ற பெயரிலேயே வெளியாகிறது.
தமிழ் பீட்சாவின் திரைக்கதையை அப்படியே பயன்படுத்தாமல் இயக்குனர் அக்ஷய் அக்னேனி இந்திக்கு ஏற்ப மாற்றி எழுதியுள்ளார். முக்கியமாக படத்தின் திகிலை அதிகப்படுத்தும்படி காட்சிகளில் சில மாற்றங்களையும் செய்துள்ளனர். 
 
3டி யில் படத்தை உருவாக்கியிருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் புதுவித அனுபவமாக இருக்கும். இந்தி பீட்சா பற்றி குறிப்பிட்ட பிஜோ‌ய் நம்பியார், தமிழிலிருந்து பல காட்சிகளை மாற்றியிருக்கிறோம். மேலும் 3டி யில் படம் வெளியாவதால் தமிழ் பீட்சா பார்த்தவர்களுக்கும் இந்தி பீட்சா புதுப்படமாக புது அனுபவமாக இருக்கும் என கூறியுள்ளார்.
 
இந்தியில் விஜய் சேதுபதி நடித்த வேடத்தை அக்ஷய் ஓபராயும், ரம்யா நம்பீஸனின் வேடத்தில் பார்வதி ஓமனக்குட்டனும் நடித்துள்ளனர்.
 

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

Show comments