Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு - இன்று பூஜை மே 19 முதல் படப்பிடிப்பு

Webdunia
புதன், 14 மே 2014 (11:07 IST)
மிஷ்கினின் புதுப்படம் பிசாசு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மே 19 -ம் தேதியே ஆரம்பமாகிறது.

டார்க் த்ரில்லர்வகை படங்களை எடுத்து வந்த மிஷ்கின் அடுத்து ஹாரர் படம் ஒன்றை இயக்குகிறார். தமிழில் ஹாரர்வகை படங்கள் இதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக பிசாசு இருக்கும். வழக்கம்போல் தனது திரைக்கதையையும், கதை சொல்லும் முறையையும் (சரியாகச் சொன்னால் சினிமா மொழியையும்) நம்பி இந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். படத்தை தயாரிப்பது பாலாவின் பி ஸ்டுடியோஸ்.
 
பிசாசு போன்ற தமிழுக்கு புதிதான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள எந்தத் தயாரிப்பாளரும் பயப்படுவார்கள். பாலா இயக்குனராக இருப்பதாலேயே துணிந்து மிஷ்கினின் பரிசோதனை முயற்சிக்கு தோள் கொடுத்துள்ளார்.
 
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் திரைமொழி நன்றாக இருந்தாலும், படத்தின் மையக்கரு பல்வேறு குறைகளை கொண்டதாக இருந்தது. பிசாசில் அதுபோன்ற குறைகள் இல்லாமலிருக்கும் என நம்புவோம்.
 
முதல்முறையாக பிசாசு வெற்றிபெற வாழ்த்துகள் என சொல்ல வைத்துள்ளது மிஷ்கினின் படப்பெயர்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments