Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்லும் உத்தம வில்லன் கமல்

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:25 IST)
உத்தம வில்லன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாடல் காட்சியை படமாக்குவதற்காக வெளிநாடு செல்கின்றனர்.
எட்டம் நூற்றாண்டு உத்தமன் என்ற நாடகக் கலைஞராகவும் 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனோரஞ்சன் என்ற சினிமா நடிகராகவும் கமல் இரண்டு வேடங்களில் உத்தம வில்லனில் நடிக்கிறார். பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம், ஊர்வசி, நாசர் இவர்களுடன் கே.பாலசந்தர். கே.விஸ்வநாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை கமல், வசனம் கிரேஸி மோகன்.
ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு கன்னட சினிமா தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டது. வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளபட்ட பின் மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
 
இன்னும் சில தினங்களில் பாடல் காடசியை படமாக்க படக்குழு ஆஸ்ட்ரேலியா செல்லவுள்ளது. இந்தப் பாடல் காட்சியில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோரும் தோன்றயிருக்கிறார்கள். 
 
ஷோபி நடனத்தை அமைக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments