Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பில் விபத்து, விஷாலுக்கு 14 தையல்கள்

படப்பிடிப்பில் விபத்து, விஷாலுக்கு 14 தையல்கள்
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:02 IST)
சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் விஷாலின் விரலில் மோசமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. அடிபட்ட விரலில் பதினான்கு தையல்கள் போடப்பட்டன.
ஹரி இயக்கி வரும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னை மோகன் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. நேற்று விஷால் எதிரிகளுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. கனல் கண்ணன் சண்டைக் காட்சியை அமைத்தார்.

விஷால் ஸ்டண்ட் நடிகர் ஒருவரை ஓங்கி அடிக்க வேண்டிய காட்சியில் அந்த நடிகர் சற்று விலகியதாக கூறப்படுகிறது.
webdunia

அதனால் விஷாலின் கை தவறி அருகில் இருந்த தகரத்தின் மீது மோதியது. அதில் அவரது நடுவிரல் கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பதினான்கு தையல்கள் போடப்பட்டன.
 
இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. மருத்துவர்கள் விஷாலை ஒருவாரம் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil