Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நினைத்ததை சாதித்த வாலு டீம்

நினைத்ததை சாதித்த வாலு டீம்
, வியாழன், 15 மே 2014 (17:31 IST)
பாங்காக்கில் பாடல் காட்சியை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஹன்சிகாவின் பிடிவாதத்தையும் மீறி சாதித்துள்ளது வாலு டீம்.
 
சிம்பு, ஹன்சிகா பிரேக்கப்புக்குப் பிறகு வாலு படப்பிடிப்பு தடுமாறியது. முக்கியமாக இரு பாடல் காட்சிகள். குறிப்பிட்ட பாடல் காட்சிகளுக்கு தந்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டனர், இனி ஜூன் மாதமே கால்ஷீட் தர முடியும் என்றார் ஹன்சிகா. பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சென்றது. 
வழக்கம் போல ஹன்சிகா பெரிய மனதுடன் இரு பாடல் காட்சிகளில் நடிக்க முன் வந்தார். ஒரு பாடல் பெங்களூருவில் படமாக்கப்பட்டது. இரண்டாவது பாடலுக்கு பாங்காக் செல்ல வேண்டும் என்பது இயக்குனரின் திட்டம். 
 
வெளிநாடு செல்ல மறுப்பு தெரிவித்த ஹன்சிகா கடைசியில் பாங்காக் வர ஒப்புக் கொண்டார். திட்டமிட்டபடி பாங்காக்கில் பாடல் காட்சியை படமாக்குகின்றனர்.
 
இந்த இரு பாடல் காட்சிகளுடன் வாலு படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிகிறது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படம் ஜூலையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil