Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார்வே திரைப்பட விழா - சிறந்த படம் பரதேசி

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (11:35 IST)
கடந்த நான்கு வருடங்களாக நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்து வருகிறது. ஐந்தாவது வருடத்துக்கான (2013) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய பாலா சிறந்த இயக்குனராகவும், ஒளிப்பதிவு செய்த செழியன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், அதர்வா சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
விடியும் முன் படத்தில் நடித்த பூஜா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுக்கு சூரி தேர்வாகியுள்ளார். கடல், மரியான் படத்துக்கு இசையமைத்த ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர்.
 
மரியானில் வரும் எங்க போன ராசா பாடலை பாடிய சக்தி ஸ்ரீகோபாலன் சிறந்த பாடகியாகவும், தங்கமீன்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறந்த பாடகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்கமீன்கள் பாடல்களுக்காக நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது கிடைத்துள்ளது.
 
வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்தமுறை மனோரமா தேர்வாகியுள்ளார். பாலுமகேந்திரா நினைவு விருது ஹரிதாஸ் படத்துக்கு வழங்கப்பட இருக்கிறது.
 
இந்த விருதுகள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
 

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

Show comments