Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை! 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
புதன், 19 மார்ச் 2014 (08:10 IST)
FILE
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கை அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தன்மை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக பொதுமக்களில் பலர் குளிர்பானங்களை குடித்து தாகம் தீர்த்தனர். அதிக வெயில் காரணமாக மாலையில் மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டத ு.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments