Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவுக்கு ஓகே, த்ரிஷாவுக்கு...?

நயன்தாராவுக்கு ஓகே, த்ரிஷாவுக்கு...?
, வியாழன், 29 மே 2014 (12:40 IST)
பென்சில் படத்தில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவை இயக்குவது அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். நாயகியாக நடிப்பது கயல் படத்தின் நாயகி ஆனந்தி. ஜீ.வி.பிரகாஷே இந்தப் படத்துக்கு இசையமைக்கவும் செய்கிறார்.
 
பழைய படங்களின் பெயரை பயன்படுத்தினாலோ, பிரபலங்களின் பெயரை படப்பெயராக வைத்தாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதம் வாங்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியிருக்கும் விதி. அதன்படி த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்துக்கு த்ரிஷா,  நயன்தாரா இருவரிடமும் நோ அப்ஜெக்ஷன் கடிதம் வாங்க வேண்டும்.
webdunia
நயன்தாராவிடம் இது குறித்து ஜீ.வி.பிரகாஷ் சொன்னதும் உடனே நோ அப்ஜெக்ஷன் கடிதம் தந்துள்ளார். த்ரிஷாவிடமிருந்து இதுவரை வாங்கவில்லையாம். அவரும் தருவார் என்பதில் பட யூனிட்டுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
 
நயன்தாரா, த்ரிஷா இருவரின் பெயரையும் பயன்படுத்துவதற்கு ஜீ.வி.பிரகாஷ் சில லட்சங்கள் தர முன் வந்ததாகவும், அப்படி அவர் தந்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சில வாரங்கள் முன்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 
 
ஜீ.வி.பிரகாஷ் பணம் தந்தாரா இல்லையா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil