Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் புறக்கணிப்பு - நறநறக்கும் தயாரிப்பு

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2014 (10:44 IST)
நயன்தாராவா... அவர் ரொம்ப நல்லவராச்சே என்றுதான் இதுவரை தெலுங்கு சினிமா உலகம் பேசி வந்தது. அந்த நல்ல இமேஜில் நயன்தாராவே ஒரு ஓசோன் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளார்.


 
அப்படி என்ன நடந்தது?
 
கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகாவில் (தமிழில் நீ எங்கே என் அன்பே) நயன்தாரா நடித்து வந்தார்.

கஹானியில் நடித்த வித்யாபாலனைவிட நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார், நயன்தாராவுடன் ஒப்பிடுகையில் வித்யாபாலன் ஒன்றுமேயில்லை என்றெல்லாம் படத்தை இயக்கிய சேகர் கம்மூலா முந்தாநாள்வரை நயன்தாராவை பாராட்டி வந்தார். நயன்தாரா படப்பிடிப்புக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்தார் எனவும் கூறினார்.
அந்த நற்பெயரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நாசம் செய்தார் நயன்தாரா. அனாமிகாவைப் பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் எல்லாமே நயன்தாராதான். அதனால் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளரும், இயக்குனரும் அவரை கேட்டிருந்தனர். ஆனால் விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. இது படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. வெளிப்படையாகவே நயன்தாராவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
 
நயன்தாராவின் மீது தெலுங்கு சினிமாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

"கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" படத்தின் ஆடியோ உரிமை ₹17.70கோடிக்கு விற்கப்பட்டுள்ளது!

"பூமர காத்து" திரை விமர்சனம்!

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Show comments