Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிக்க வந்ததே விபத்துதான்

நடிக்க வந்ததே விபத்துதான்
, சனி, 10 மே 2014 (18:17 IST)
பிரபல தயாரிப்பு நிறுவனமான லஷ்மி மூவி மேக்கர்ஸ்‌ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் மகன் என்று சொல்லிக் கொள்வதால் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சிரமமில்லாமல் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறதே தவிர, பட வாய்ப்புகளை வாங்கித் தருவதில்லை என்கிறார் தற்போது காமெடியில் கலக்கி வரும் அஸ்வின். 
 
ஆரம்பத்தில் நடிக்க ஆர்வம் இல்லாமல்தான் இருந்தேன். ஒரு நாள் இயக்குனர் கஸ்தூரி ராஜா சாரோட ஆபீஸ் போனப்போ.. நடிக்கிறியா..? என்றார். ஏதோ விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்கிறார் என நானும் சரியென்று சொல்லி விட்டேன். அடுத்த இரண்டாவது வாரத்திலேயே கூப்பிட்டு அவர் இயக்கிய காதல் வசமாச்சி படத்தில் நடிக்க வைத்தார். இப்படித்தான் விபத்தாக நடிகனானேன் எனும் அஸ்வின் தற்போது பல படங்களில் காமெடியில் கலக்கி வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil