Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையை திருமணம் செய்தது உண்மைதான் - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட இயக்குனர்

நடிகையை திருமணம் செய்தது உண்மைதான் - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட இயக்குனர்
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (18:00 IST)
நடிகை சுஜிபாலாவை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று கூறிய இயக்குனர் பி.ரவிக்குமார் புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.
ரவிக்குமார் இயக்கி நடித்த உண்மை படத்தில் சுஜிபாலா ஹீரோயினாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது ரவிக்குமார் சொல்லும் கதை. திருமணம் முடிந்த பின் வீடு, தோட்டம் எல்லாம் சுஜிபாலாவுக்கு வாங்கித் தந்தேன். அனைத்தையும் பெற்றுக் கொண்டு கல்யாணமே நடக்கவில்லை என்கிறார் சுஜிபாலா என்று இப்போதும் சுஜிபாலா மீது குற்றஞ்சாட்டுகிறார்.
webdunia
சுஜிபாலாவோ, எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. ரவிக்குமார் எனக்கு வீடும் வாங்கித் தரவில்லை, தோட்டமும் தரவில்லை. முக்கியமாக அவரிடம் இதெல்லாம் வாங்க பணமேயில்லை. அப்படி இருந்தால் எடுத்தப் படத்தை முதலில் ரிலீஸ் செய்யட்டும் என்கிறார்.
 

இந்நிலையில் உண்மை படத்தின் பிரஸ்மீட்டில் ரவிக்குமார் கலந்து கொண்டு, சுஜிபாலாவை திருமணம் செய்ததற்கு ஆதாரமாக அவருக்கு தாலி கட்டும் புகைப்படங்களை வெளியிட்டார்.
webdunia

புகைப்பட ஆதாரத்துக்குப் பிறகும் சுஜிபாலா திருமணத்தை ஒத்துக் கொள்வார் என்று நினைப்பதற்கில்லை. சினிமாவுக்காக எடுக்கப்பட்ட திருமண காட்சி அது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
ரவிக்குமார் - சுஜிபாலாவின் திருமண பஞ்சாயத்துக்காகவே தனி கோர்ட் வைக்க வேண்டி வரும்.
 

Share this Story:

Follow Webdunia tamil