Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சங்க பொதுக்குழு - அதிருப்தியாளர்களை தாக்க முயற்சி

நடிகர் சங்க பொதுக்குழு - அதிருப்தியாளர்களை தாக்க முயற்சி
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (17:27 IST)
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி நடிகர் சங்கத்தின் அதிருப்தி கோஷ்டியாளர்களான பூச்சி முருகன், காஜா மொய்தீன் போன்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டடம் கட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
 
இந்நிலையில் பூச்சி முருகன் உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டியினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை கண்டதும் எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் அவர்களை அடிக்கப் பாய்ந்தனர். வாய் தகராறு கைகலப்பாக மாறும் முன் போலீஸ்காரர்கள் அவர்களை விலக்கி அதிருப்தி கோஷ்டியினர் அரங்கத்துக்குள் செல்ல உதவினர்.
 
அங்கும் அவர்களை சிலர் அடிக்கப் பாய்ந்தனர். நிலைமை சரியில்லை என்று உணர்ந்தவர்கள் பொதுக்குழுவிலிருந்து பாதியில் வெளியேறினர். வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பூச்சி முருகன், நீதிமன்ற உத்தரவுபடிதான் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்தேன். ஆனால் வருகைப் பதிவேட்டில் என்னை கையெழுத்து போட விடவில்லை. தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்தனர். அதனால் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாமல் பாதியில் திரும்பி விட்டேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil