Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெ‌ன்‌னி‌ந்‌திய ‌சி‌னிமா நூற்றாண்டு விழா

தெ‌ன்‌னி‌ந்‌திய ‌சி‌னிமா நூற்றாண்டு விழா
, சனி, 2 மார்ச் 2013 (19:07 IST)
தென்னிந்தியாவில் சினிமா தொடங்கி நூறாண்டுகளை நெருங்கி வருவதைக் கொண்டாடும் விதமாக பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.

இதில் தொடக்க கால சினிமா ஆரம்பித்தது முதல் இன்றைய வளர்ச்சி வரை குறும்படமாக எடுக்கவுள்ளனர். அதற்காக ஒரு இயக்குனர் குழு வேலைப் பார்த்து வருகிறது. மேலும் எந்தவிதமான கலை நிகழ்ச்சிகள், யார்.. யார் சிறப்பு அழைப்பாளர்கள் என்பது போன்ற ஆலோசணைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் வர்த்தக சபையினர்.

விழா சென்னையில் நடந்தால் அனைவருக்கும் சுலபமாக இருக்கும் என்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கை கேட்டு அரசுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். தென்னிந்திய விழா என்பதால் எல்லா மொழி ஸ்டார்களையு‌ம் அழைக்கவுள்ளனர்.

அதன்படி ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, மோகன்லால், அம்பரீஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil