Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடை

தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடை
, ஞாயிறு, 4 மே 2014 (15:27 IST)
தெலுங்கு இயக்குனர்கள் சங்கம் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்துள்ளது. 

நயன்தாராவை தெலுங்கு திரையுலகம் உள்ளங்கையில் வைத்து கொண்டாடி வந்தது. அவர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்தவேளை சினிமாவைவிட்டு விலகி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அப்போது நயன்தாரா ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதுவே தனது கடைசிப் படம் எனவும் கூறியிருந்தார்.
 
ஸ்ரீராமராஜ்ஜியத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு விடைதரும் விதமாக அவர் நடந்து வருகையில் பூத்தூவி வாழ்த்தினர். அப்படியொரு பிரியாவிடை எந்த நடிகைக்கும் தரப்பட்டதில்லை.
 

காதல் முறிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தவேளை தெலுங்கு சினிமாவே நயன்தாராவை முதலில் இருகரம் நீட்டி வரவேற்றது. தெலுங்கில் இரு படங்களில் கமிட்டான பிறகே தமிழில் நடிக்க வந்தார். 
 
இந்நிலையில் சேகர் கம்முலாவின் அனாமிகா படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. நயன்தாராவை மையப்படுத்திய ஹீரோயின் ஓரியண்ட் படம் அனாமிகா. அதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. இதுகுறித்து தெலுங்கு இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டது. புகாரை விசாரித்தவர்கள் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்துள்ளனர்.
 
சில தினங்கள் முன்பு, ஆகடு படத்தின் இணை இயக்குனரை மோசமான வார்த்தைகளில் திட்டியதற்காக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு படங்களில் நடிக்க தெலுங்கு இயக்குழுனர்கள் சங்கம் ஒரு வருடம் தடை விதித்து முக்கியமானது.
 
தமிழ்ப் படங்களில் நடிக்கும் பல நடிகைகளும் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணித்துதான் வருகின்றனர். அவர்களின் சம்பளத்தில் கொஞ்சம் பிடித்தம் செய்யப்படும் என்று மைக்குக்கு முன் முழங்குகிறார்களே தவிர தமிழில் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக காணோம்.
 

Share this Story:

Follow Webdunia tamil