Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிப் படங்கள்

தீபாவளிப் படங்கள்
, வெள்ளி, 1 அக்டோபர் 2010 (20:26 IST)
தீபாவளிக்கு கமல், ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளிவரப் போதில்லை என்பது உறுதியாகிவிட்டது. வி‌ஜ‌ய், அ‌‌ஜீத் படங்களும்கூட வெளிவரப் போதில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே. விக்ரம் நடித்தப் படமும் இந்த பட்டியலில் இல்லை.

இறுதி தகவல்களின்படி, சூர்யா, தனுஷ், சிம்பு நடித்தப் படங்கள் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரும் என‌த் தெ‌ரிகிறது. இதில் சிம்பு படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சூர்யா நடித்த ரத்த ச‌ரித்திரம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இதனை படத்தின் தயா‌ரிப்பாளர்களும் படத்தை வெளியிடும் கிளவுட் நைனும் உறுதி செய்துள்ளது. இப்படத்துடன் போட்டி போடும் இன்னொரு படம் - அதுவும் கிளவுட் நைன் வெளியிடும் படம்தான் - வ குவாட்டர் கட்டிங்.

தீபாவளிப் படங்களில் இந்த இரு படங்களுமே நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற படங்கள் குறித்த தகவல்களுக்கு... காத்திருக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil