Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு ரஹ்மானின் லிங்கா இசை விருந்து

தீபாவளிக்கு ரஹ்மானின் லிங்கா இசை விருந்து
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (15:36 IST)
தீபாவளிக்கு லிங்கா படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் லிங்கா பாடல்களை கேட்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் உள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் லிங்காவின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்தவர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னை ஷெட்யூல்டுடன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிடும். பிறகு சில பாடல் காட்சிகள்.
 
டிசம்பர் 12 படத்தை வெளியிடுவது உறுதியான நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
 
ரஹ்மான் ரசிகர்களுக்கு தீபாவளி இசை விருந்து நிச்சயம் என்கிறது லிங்கா யூனிட்.
 

Share this Story:

Follow Webdunia tamil