Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு மோதும் விஷால், விஜய் படங்கள்

தீபாவளிக்கு மோதும் விஷால், விஜய் படங்கள்
, புதன், 23 ஏப்ரல் 2014 (17:25 IST)
ஒரு படம் நடிக்கும் போதே அடுத்தப் படத்தின் கதையை, இயக்குனரை தேர்வு செய்து இடைவெளியில்லாமல் நடிப்பது விஜய்யின் வழக்கம். இப்போது அந்த வழக்கத்துக்கு வந்திருக்கும் இன்னொரு நடிகர் விஷால்.
பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என்று இடைவெளி விடாமல் நடித்தவர் தற்போது ஹரியின் பூஜை படத்தில் பிஸி. ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி வெளியீடு என்று அறிவித்தனர், விளம்பரங்களிலும் அதனை குறிப்பிட்டனர். 
 
விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் கத்தி படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. தீபாவளியை குறி வைத்தே படத்தை தயாரித்து வருகின்றனர். தீபாவளி வெளியீடு என்பதில் கத்தி, பூஜை இருதரப்பும் உறுதியாக இருப்பதால் விஷால் - விஜய் மோதல் உறுதி.
 
பூஜையை விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷாலே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil