Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் தயாரான திருட்டு டிவிடி - ஒரு 'திடுக்' கண்டுபிடிப்பு

Webdunia
சனி, 14 ஜூன் 2014 (11:59 IST)
இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்தலாம். அதற்கு இந்த செய்தியே சான்று.
படம் வெளியான உடனே அதன் திருட்டு டிவிடியும் தயாராகி விடுகிறது. சில நேரங்களில் டிவிடி ரிலீஸன பிறகே படம் வெளியாகிறது. ஜக்குபாய் போல அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில் எடுத்தவரைக்கும் வெளியிடும் அட்வான்ஸ்டு கும்பல்களும் இருக்கின்றன. நாம் சொல்ல வருவது மஞ்சப்பை விவகாரம். 
 
கோச்சடையான் வசூலை முறியடிக்க இன்னும் சில ரூபாய்கள்தான் உள்ளது என்று மஞ்சப்பையை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தின் திருட்டு டிவிடி சந்தையில் தாராளமாக கிடைக்கிறது. மலிவு விலை. ஒரு டிவிடி நாற்பது ரூபாய். நூறுக்கு மூன்று. 
 
இந்த திருட்டு டிவிடிகள் தயாரானது சாத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் என்று கண்டுபிடித்துள்ளனர். திருட்டு டிவிடியை வைத்து எந்த திரையரங்கில் இருந்து அதனை காப்பி செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாத்தூர் திரையரங்கை கார்னர் செய்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்ட திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளனர். 
 

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

Show comments