Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாமதமான வெடிகுண்டு முருகேசன்

தாமதமான வெடிகுண்டு முருகேசன்
, வெள்ளி, 24 ஜூலை 2009 (16:48 IST)
தமிழகமெங்கும் குறைவில்லாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது அண்ணாமலை பிலிம்சின் வெடிகுண்டு முருகேசன். பசுபதியின் நடிப்புக்கும், வடிவேலின் காமெடிக்கும் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ்.

தமிழகமெங்கும் படம் வெளியானாலும் சில காரணங்களால் மதுரையில் மட்டும் படம் வெளியாகவில்லை. ஒரு நாள் கழித்து மதுரையில் படம் வெளியாகும் என ‌ரிலீஸின் போது தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், வாரம் ஒன்றாகியும் மதுரை ஜனங்களுக்கு முருகேசனைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

இன்று மதுரையில் படம் வெளியாகும் என தயா‌ரிப்பாளர் தரப்பில் மீண்டும் கூறப்பட்டுள்ளது. மதுரை பத்தி‌ரிகைகளில் இன்று விளம்பரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால் தயா‌ரிப்பாளர் தரப்பு கூறுவதை நம்பலாம்.

வெடிகுண்டு முருகேசனைப் போல விஜயகாந்தின் எங்கள் ஆசான் படமும் தாமதமாகி வருகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வெளியான இப்படம் சென்னையில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பது தயா‌ரிப்பாளருக்கே தெ‌ரியவில்லை. விஜயகாந்துக்கே இந்த நிலையா?

Share this Story:

Follow Webdunia tamil