Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தளபதி 69’ படத்தின் நாயகி மஞ்சு வாரியர்? கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினாரா எச் வினோத்..!

Siva
திங்கள், 30 செப்டம்பர் 2024 (07:08 IST)
நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 திரைப்படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது, "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தருகிறேன்" என்று இயக்குனர் ஹெச். வினோத் அவருக்கு வாக்குறுதி அளித்ததாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தளபதி 69 திரைப்படத்தில் மஞ்சு வாரியரை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர், அதன் பின்னர் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் ரஜினியின் "வேட்டையன்" படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது விஜய்யின் தளபதி 69 படத்திலும் நடிக்க இருப்பதால், குறுகிய காலத்தில் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர் இணையும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments