Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவா - தாராளமாக கிடைக்கிறது டிக்கெட்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2013 (10:25 IST)
FILE
காலந்தாழ்த்தி வெளியானதால் தலைவாவில் முதலீடு செய்த அனைவரும் வருமா வராத கலக்கத்தில் இருக்கிறார்கள். நேற்று படம் வெளியான நாளில் பல திரையரங்குகளில் டிக்கெட் எளிதாக கிடைத்தது. பொதுவாக விஜய் படங்களுக்கு அடித்துப் பிடித்துதான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும்.

இன்று சென்னையில் உள்ள - சத்யம் தவிர்த்து - அனைத்துத் திரையரங்குகளிலும் டிக்கெட்கள் உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும் டிக்கெட்நியூ இணையதளம் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்கள் இருப்பதை உறுதி செய்கிறது. வார நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கலாம், வார இறுதியில் திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

பி, சி சென்டர்களிலும் இரண்டாவது நாளுக்கு கூட்டம் அதிகமில்லை. சிரமம் இல்லாமல் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். சென்னை புறநகர் திரையரங்குகளில் முதல்நாள் டிக்கெட் விலை ரூபாய் 100 150. இரண்டாம் நாளான இன்று 120, 80 என டிக்கெட் கட்டணத்தை பல திரையரங்குகள் குறைத்திருக்கின்றன.

மொத்தத்தில் தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய ஓபனிங்கை இழந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments