Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவின் ஆயிரத்து சில்லரையாவது காதல் கதை

தமிழ் சினிமாவின் ஆயிரத்து சில்லரையாவது காதல் கதை
, வெள்ளி, 28 மார்ச் 2014 (11:06 IST)
தமிழ் சினிமாவின் ஆயிரத்து சில்லரையாவது காதல் கதை என்றுதான் விஜய் சேதுபதியின் புதிய படம் வசந்த குமாரனை விளம்பரப்படுத்துகின்றனர்.
Vasantha kumaran poster

புறம்போக்கு, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய் என்று இருபத்தி நான்கு மணிநேரமும் என்கேஜ்டாக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படம்தான் இந்த வசந்த குமாரன்.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோ‌டியாக நடிக்க லட்சுமி மேனனை கேட்டிருக்கிறார்கள். படத்தை இயக்குகிறவர் ஆனந்த் குமரேசன்.
 

இதுவும் காதல் கதைதான். படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரங்களில், தமிழ் சினிமாவின் ஆயிரத்து சில்லரையாவது காதல் கதை என்று குறிப்பிட்டுள்ளனர்.
webdunia
Vasantha kumaran poster
தங்களையும் தங்களின் படைப்புகளையும் தாங்களே பகடி செய்வதுதான் இப்போதைய ட்ரெண்ட். அந்த அலைவரிசையில் தயாராகும் படம் இது என்பதை விளம்பர வாசகமே கூறிவிட்டது. 
 
ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்கு இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil