Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் திலகன்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (14:19 IST)
மலையாள நடிகர் சங்கமான அம்மா நடிகர் திலகனுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த‌த் தடையை முதலமைச்சர் வரை கொண்டு சென்ற பிறகும் திலகனுக்கு எந்தவொரு பயனுமில்லை. அரசியல் நுழைய முடியாத கோட்டை மலையாள திரையுலகம்.

தனது மீதான தடைக்கு நெடுமுடிவேணுவும், மம்முட்டியுமே காரணம் என பொது மேடையிலேயே கர்‌ஜித்திருக்கிறார் திலகன். இது அவர் மீதான தடையை மேலும் வலுவடையச் செய்திருக்கிறது.

மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பரம எத ி‌ ரியான இயக்குனர் வினயன் தமிழில் திலகனை நடிக்க வைக்கிறார். மலையாள நடிகர் சங்கத்தின் தடையை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திலகன் நடிக்க வைக்கப்படுகிறார் என்பது ஒருவகையில் சந்தோஷமான செய்தி.

தமிழில் இயக்கும் காதல் வேதம் என்ற படத்தில் திலகனை சுதந்திர போராட்ட‌த் தியாகியாக நடிக்க வைக்கிறார் வினயன். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான படமாம் இது.

தடையும்கூட ஒருவகையான தீவிரவாதம்தான்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments