Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா - ஷாருக்கானின் கோச்சடையான் பேச்சு

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா - ஷாருக்கானின் கோச்சடையான் பேச்சு
, திங்கள், 10 மார்ச் 2014 (11:21 IST)
தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா. அதற்காகதான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றார் ஷாருக்கான்.
FILE

கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் 25 வருடங்களுக்கு முந்தைய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
webdunia
FILE

‘‘25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருந்தார். வெற்றிபெற கடின உழைப்பு தேவைங்கிறதை அப்போது புரிந்து கொண்டேன்.
webdunia
FILE

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார். அவருக்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil